ஆப்நகரம்

'ஒமைக்ரான்' வைரசின் புகைப்படம் - வெளியிட்டது WHO!

ஒமைக்ரான் வைரசின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 29 Nov 2021, 3:58 pm

ஹைலைட்ஸ்:

  • ஒமைக்ரான் வைரசின் புகைப்படம்
  • வெளியிட்டது WHO!
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Omicron Image.
ஒமைக்ரான் வைரசின் முதல் புகைப்படத்தை, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க நாட்டில், கொரோனா வைரஸ் தொற்று புதிய அவதாரம் எடுத்துள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. புதிய வகை வைரஸ் தொற்றால், உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன.
இது, விரைவில் பரவக்கூடியது என்றும், நோய் எதிர்ப்பை எளிதில் தவிர்க்கக் கூடிய தன்மை உடையது என்றும் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். ஒமைக்ரான் வைரஸ், 50க்கும் மேற்பட்ட உருமாற்றங்களை கொண்டிருப்பதாகவும், அதில் 32 மாற்றங்கள் ஸ்பைக் புரோட்டீன் (வெளிப்புற புரதம்)களில் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா - எங்கு தெரியுமா?
இந்நிலையில் இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள புகழ்பெற்ற பாம்பினோ கெசு மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள், ஒமைக்ரான் மாறுபாட்டின் முதல் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். இந்தியாவில் பரவியுள்ள டெல்டா வகை வைரசிற்கும், ஒமைக்ரான் வகை வைரசிற்கும் உள்ள வித்தியாசங்களை அந்த புகைப்படத்தில் தெளிவுப்படுத்தி உள்ளனர். அதாவது, டெல்டா வைரசை விட ஒமைக்ரான் வைரஸ் அதிக உருமாற்றங்களை கொண்டிருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

அடுத்த செய்தி