ஆப்நகரம்

கொரோனாவால் 12000 விலங்குகள் கொத்து கொத்தாக பலி!

கொரோனாவால் பல ஆயிரக்கணக்கான மிங் விலங்குகள் பலியாகியுள்ளன.

Samayam Tamil 11 Oct 2020, 5:00 pm

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க மனிதர்களை பாடாய் படுத்தி வருகிறது. சில இடங்களில் விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், விலங்குகளில் இருந்து மற்ற விலங்குகளுக்கு கொரோனா பரவியதாக தகவல்கள் இல்லை.
Samayam Tamil Mink


இந்நிலையில், அமெரிக்காவில் உட்டா மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களில் மிங் எனப்படும் கீரி வகை விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மிங்குகள் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு மாகாணங்களிலும் இதுவரை 12,000க்கும் மேற்பட்ட மிங்குகள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. முதல்முறையாக ஆகஸ்ட் மாதத்தில் உட்டா மாகாணத்தில் மிங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது 10,000 மிங்குகள் இறந்துவிட்டன.

கொரோனாவை கண்டுபிடிச்சது நாங்கதான்: சீனா பகீர் தகவல்!

கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவியுள்ளதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில், விஸ்கான்சின் மாகாணத்தில் 2,000 மிங்குகள் இறந்துள்ளதாக அம்மாகாணத்தின் வேளாண் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

மிங் வளர்ப்பு பண்ணைகளில் மூன்று தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது குணமடைந்துள்ளனர். மிங்குகளை போலவே இதுவரை நாய்கள், பூனைகள், சிங்கம், புலி ஆகிய விலங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நெதர்லாந்து, ஸ்பெயின், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் மிங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வேளாண் துறை கூறுகிறது.

அடுத்த செய்தி