ஆப்நகரம்

பெட்ரோல் லாரி விபத்து : 140 பேர் உயிருடன் எரிந்த கொடுமை!

பாகிஸ்தானில் பெட்ரோல் லாரி வெடித்ததில் 149 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 117 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

TNN 25 Jun 2017, 5:20 pm
லாகூர் : பாகிஸ்தானில் பெட்ரோல் லாரி வெடித்ததில் 149 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 117 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Samayam Tamil over 149 burnt alive 117 injured as oil tanker explodes in pakistan
பெட்ரோல் லாரி விபத்து : 140 பேர் உயிருடன் எரிந்த கொடுமை!


கராச்சியில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி ஒன்று டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளானது. விபத்திற்கு உள்ளான லாரியில் இருந்து பெட்ரோல் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பெட்ரோலை பிடிக்க தொடங்கினர். அப்போது லாரிக்கு அருகே சிகரெட் பற்றி வைக்க யாரோ தீயை பற்ற வைத்ததால், லாரி தீப்பிடித்து வெடித்தது. இதனால் பெட்ரோல் பிடித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் சுமார் 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீ பிடித்ததும் சம்பவ இடத்திலேயே 123 பேர் உயிருடன் எரிந்து சாம்பலானார்கள். சுமார் 50,000 லிட்டர் பெட்ரோல் லாரியில் இருந்து வெளியேறியுள்ளதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். பெரும்பாலானவர்களின் உடல்கள் முற்றிலும் எரிந்துவிட்டதால் டிஎன்ஏ சோதனை மூலமே கண்டறியப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல மூன்று ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது. அருகில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த துயர சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தான் வரலாற்றில் இது மிகவும் துயர சம்பவம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி