ஆப்நகரம்

கட்சி பொறுப்பிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

TOI Contributor 22 Feb 2018, 9:01 am
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil pak top court bars nawaz sharif from heading his party
கட்சி பொறுப்பிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம்


பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தான் பிரதமராக இருந்த காலத்தில், பனாமா பேப்பர்ஸ் ஊழலில் சிக்கினார். இதனையடுத்து அவரை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட போதிலும், அவருடைய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், அங்குள்ள அவாமி முஸ்லிம் லீக் உள்ளிட்ட மற்ற பல கட்சிகள், நவாஸ் தனது கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் விலக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அங்குள்ள அரசியல் சட்டத்தின் 62,63 வது பிரிவின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் ஒரு கட்சியின் தலைவராக இருக்க முடியாது என்று உத்தரவிட்டுள்து.

அடுத்த செய்தி