ஆப்நகரம்

பாகிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 70 பேர் பலி; பலர் படுகாயம்

பாகிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக நடத்திய கொடூர தாக்குதல்களில் சிக்கி, பொதுமக்கள் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

TNN 24 Jun 2017, 4:12 pm
பாகிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக நடத்திய கொடூர தாக்குதல்களில் சிக்கி, பொதுமக்கள் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
Samayam Tamil pakistan 70 killed 100 injured in multiple attacks on eve of eid
பாகிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 70 பேர் பலி; பலர் படுகாயம்


உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள், நோன்புக்காலம் முடிவடைந்து, ரம்ஜான் கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து, ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த 2 நாட்களில் தொடர்ச்சியாக, பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதன்படி, முதலில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா என்ற இடத்தில் போலீஸ் நிலையத்தை குறிவைத்து, நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில், 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இவர்களில், போலீசாரும் அடங்குவர்.

இதையடுத்து, குர்ரம் பகுதியில் உள்ள பராசினார் நகரில் பொதுமக்கள் கூட்டம் நிறைந்த மார்க்கெட் பகுதியில் தொடர்ச்சியாக, சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன. இதில், 50 பேர் வரை உயிரிழந்தனர். 80க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த இரண்டு தாக்குதல்களுக்கும், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஜமாத் அல் அஹ்ரர் ஆகிய தீவிரவாத அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளன.

Twin blasts tore through a market crowded with Eid shoppers in a mainly Shia town, as a suicide bomber blew up his explosives-laden car and militants opened fire on police in separate attacks in Pakistan's three major cities today, killing 70 people and wounding nearly 100.

அடுத்த செய்தி