ஆப்நகரம்

பாகிஸ்தானில் மனநலம் பாதித்த மசூதி காப்பாளர் 20 பேரை சித்ரவதை செய்து கொன்ற கொடூரம்!

பாகிஸ்தானில் தர்கா காப்பாளராக இருந்த மனநலம் பாதித்த நபர், 20 பேரை சிறைபிடித்து சித்ரவதை செய்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 2 Apr 2017, 8:37 pm
பாகிஸ்தானில் தர்கா காப்பாளராக இருந்த மனநலம் பாதித்த நபர், 20 பேரை சிறைபிடித்து சித்ரவதை செய்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil pakistan at least 20 people tortured killed by mentally ill custodian at a shrine in punjab province
பாகிஸ்தானில் மனநலம் பாதித்த மசூதி காப்பாளர் 20 பேரை சித்ரவதை செய்து கொன்ற கொடூரம்!

லாகூர் நகரில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் அலி குஜ்ஜார் என்ற ஊர் உள்ளது. இங்கு அமைந்துள்ள தர்காவில் 50 வயதான அப்துல் வாஹீத் என்ற நபர் காப்பாளராக உள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட இவர், தர்காவுக்கு வழிபட வரும் உள்ளூர் மக்களை சிறைபிடித்து, பல வழிகளில் சித்ரவதை செய்து கொன்று வந்துள்ளார்.

சமீபத்தில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேரை சிறைபிடித்த இந்த நபர், அவர்களுக்கு போதை மருந்துகளை கொடுத்துள்ளார். அதன்பின், குச்சியால் அடித்தும், கத்தியால் குத்தியும் அவர்களை சித்ரவதை செய்து கொன்றுவிட்டார். ஆண்கள், பெண்கள் என உயிரிழந்த நபர்களில் அடங்குவர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த போலீசார், மனநலம் பாதித்த நபரை கைது செய்தனர். இதுபற்றி தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Pakistan: at least 20 people tortured, killed by mentally ill custodian at a shrine in punjab province.

அடுத்த செய்தி