ஆப்நகரம்

பாகிஸ்தான் 72வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்

பாகிஸ்தானின் 72வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், மாகாண தலைநகரங்கள் என பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Samayam Tamil 14 Aug 2018, 3:17 pm
பாகிஸ்தானின் 72வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், மாகாண தலைநகரங்கள் என பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
Samayam Tamil pak-i-day
பாகிஸ்தான் 72வது சுதந்திர தினம்: கோலாகல கொண்டாட்டம்


ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு ஒருநாள் முன்னதாக பாகிஸ்தானிற்கு சுதந்திரம் வழங்கினர். அதன்படி அந்நாட்டில் இன்று சுதந்திர கொண்டாட்டங்கள் கலை கட்டியுள்ளன.

இதற்கான அந்நாட்டின் அனைத்து அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டன. நாட்டின் தலைநகரில் 21 குண்டுகள் முழங்கவும், பாகிஸ்தான் மாநிலங்களில் தலைநகரில் 21 குண்டுகள் முழங்கவும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இஸ்லமாபாத்தில் உள்ள ஜின்னா அரங்கில் அந்நாட்டின் குடியரசுத் தலைவர் மம்னூன் ஹூசைன் தேசியக் கொடியை ஏற்றினார். இதற்காக நடைபெற்ற கோலாகல விழாவில் பாகிஸ்தான் தற்காலிக பிரதமர் நசிருக் மல்க் மற்றும் ராணுவ முப்படை தளபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்கள், இந்திய வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். இந்திய வீரர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

பாகிஸ்தானின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் நிதி நெருக்கடியிலிருக்கும் சவால்களை பாகிஸ்தான் திறம்பட சந்தித்து, அதிலிருந்து மீண்டு வரும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி