ஆப்நகரம்

முஷரப் பாஸ்போர்ட் முடக்கம் பாக். கோர்ட் உத்தரவு!

பாகிஸ்தான் மாஜி அதிபர் முஷரப் மீது தேசத்துரோகம் உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது.

Samayam Tamil 17 Mar 2018, 1:22 am
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் மாஜி அதிபர் முஷரப் மீது தேசத்துரோகம் உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது.
Samayam Tamil pakistan court orders suspension of passport of absconder pervez musharraf
முஷரப் பாஸ்போர்ட் முடக்கம் பாக். கோர்ட் உத்தரவு!


இதனால் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை சிந்து மாகாண ஐகோர்ட் கடந்த 2014ல் நீக்கியது. இதையடுத்து துபாய் சென்றார். பின்னர் நாடு திரும்பில்லை.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் முஷரப் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஆஜராகாததால் முஷரப் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் மூலம் முஷரப்பை கைது செய்யுாறு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவிற்கிணங்க முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய அடையாள அட்டையை முடக்கி வைக்குமாறு பாக் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ISLAMABAD: In a blow to Pakistan's former dictator General (retd) Pervez Musharraf, the special court hearing the high treason case against him has also authorised the government to suspend his passport as well as his national identity card, according to a media report today.

அடுத்த செய்தி