ஆப்நகரம்

Imran Khan : பாகிஸ்தானில் இம்ரான் கான் வெற்றிக்கு மோடி தான் காரணம் - ஹெச். ராஜா

பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பெற்றதற்கு இந்திய பிரதமர் மோடி தான் காரணம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Jul 2018, 6:48 pm
பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பெற்றதற்கு இந்திய பிரதமர் மோடி தான் காரணம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Imran Khan


பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைப்பெற்றது. மொத்தம் உள்ள 272 தொகுதிகளில், தனிப்பெரும்பான்மை பெற 137 இடங்களை வெல்ல வேண்டும். இந்நிலையில் இந்த தேர்தலில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி தலைவருமான இம்ரான் கான் 119 இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றார்.

இம்ரான் கான் தான் அடுத்த பிரதமர் ஆக அதிக வாய்ப்புள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.



இம்ரான் கான் பிரதமராக மோடி தான் காரணம் :
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமராக அதிக வாய்ப்புள்ள இம்ரான் கானின் வெற்றிக்கு, இந்திய பிரதமர் மோடி தான் காரணம் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

அவரின் டுவிட்டரில், “பாகிஸ்தான் தேர்தலின் போது இந்தியாவில் மோடி அவர்களின் ஆட்சி போல் இங்கு ஆட்சி தருவேன் என்று பிரச்சாரம் செய்த திரு. இம்ரான் கான் முன்னனி.” என பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி