ஆப்நகரம்

தாக்குதல் குறித்து பாக்., கூறிய மற்றொரு பொய் அம்பலம்

பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் குண்டு வீசித் தாக்கப்பட்டது உண்மைதான் என மசூத் அசாரின் சகோதரர் மவுலானா தெரிவித்துள்ளார். தற்போது மவுலானாவின் அறிக்கையினால் அது பொய் எனத் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 4 Mar 2019, 1:08 am
2019 புல்வாமா தாக்குதல் இந்தியாவின், ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள்மீது 2019 பிப்ரவரி 14ம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதல். இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.
Samayam Tamil pakistan


ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம் ’மார்கஸ் சுபானல்லா’. இது கொலை கோட்டஒ என அழைக்கப்படுகிறது. இது பாகிஸ்தானில் உள்ளது. இதனுள் மதூத் ஆசார் வீடு உட்பட 600 குடியிருப்புகள் உள்ளன. இதில் ஜிம், நீச்சல் குளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. நட்சத்திர விடுதி போல காட்சியளிக்கும். இதனைக் கட்ட பல்வேறு நாடுகள் நிதி அளித்தன. இது இந்திய விமான படையினரால் தாக்கப்படவில்லை. பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் குண்டு வீசித் தாக்கப்பட்டது உண்மைதான் என மசூத் அசாரின் சகோதரர் மவுலானா தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திய விமானங்கள் எல்லை தாண்டி மட்டுமே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பறந்தன என முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை கூறி இருந்தது. தற்போது மவுலானாவின் அறிக்கையினால் அது பொய் எனத் தெரியவந்துள்ளது. ஆனால் தாக்குதலில் எத்தனைபேர் இறந்தனர் என்ற தகவல் இன்னும் சரியாக வெளியிடப்படவில்லை.

அடுத்த செய்தி