ஆப்நகரம்

முன்னுக்குப்பின் முரணாகப் பேசி மாட்டிக்கொண்ட பாக்.,

எஃப் - 16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்க போர் விமான தயாரிப்பு நிறுவனமான லாக்ஹிட் மார்டின் தயாரித்து வழங்கியது.

Samayam Tamil 3 Mar 2019, 4:05 am
எஃப் - 16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்க போர் விமான தயாரிப்பு நிறுவனமான லாக்ஹிட் மார்டின் தயாரித்து வழங்கியது.
Samayam Tamil 2019_3$largeimg02_Saturday_2019_115529018


இந்த விமானங்களை பயங்கரவாதிகளைத் தாக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற நாடுகளுடன் போர் புரிய பயன்படுத்தக் கூடாது என அமெரிக்கா பாக்.,கிடம் தெரிவித்து ஒப்பந்தம் இட்டு இருந்தது.

பிப்., 27ம் தேதி பாலகோட் பகுதியில் இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியபோது அமெரிக்க ஒப்பந்தத்தை மீறி பாக்., எஃப் 16 ரக விமானத்தை பயன்படுத்தியது. இதனைத்தான் அபிநந்தன் தாக்கி வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

முதலில், பாக்.,கின் எஃப்-16 ரக விமானங்கள் இந்தியாவால் தாக்கப்படவில்லை என பாக்., தெரிவித்து இருந்தது. பின்னர் எஃப் 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அதனைத் தயாரித்த அமெரிக்க நிறுவனமான லாக்ஹிட் மார்டின் இந்தியாமீது வழக்கு தொடரப் போவதாக பாக்., வதந்தி பரப்பியது.

இதனை அந்நிறுவனம் உடனே மறுத்தது. இதனையடுத்து பாக்., கூறிய இரு பொய்கள் அம்பலமாகின. தங்கள் எஃப் 16 விமானம் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை எனக் கூறியது முதல் பொய். அமெரிக்க நிறுவனம் வழக்கு தொடர்கிறது எனக் கூறியது இரண்டாவது பொய்.

தற்போது எஃப்-16 விமானத்தை இந்தியாவுக்கு எதிரான தாக்குதலுக்கு பாக்., பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை அமெரிக்கா திரட்டி வருகிறது. இது நிரூபணமானால் பாக்., உலக நாடுகளின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

அடுத்த செய்தி