ஆப்நகரம்

இந்திய வீரர்கள் மரணம்; பாக். ஊடகம் வதந்திக்கு முற்றுப்புள்ளி

இந்திய சீன எல்லையில் நமது வீரர்கள் 158 பேர் மரணமடைந்ததாக பாகிஸ்தான் ஊடகம் தவறான செய்தி வெளியிட்டதற்கு, அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

TOI Contributor 14 Sep 2017, 4:41 am
இந்திய சீன எல்லையில் நமது வீரர்கள் 158 பேர் மரணமடைந்ததாக பாகிஸ்தான் ஊடகம் தவறான செய்தி வெளியிட்டதற்கு, அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil pakistan media watchdog cracks down on tv channels airing fake news
இந்திய வீரர்கள் மரணம்; பாக். ஊடகம் வதந்திக்கு முற்றுப்புள்ளி


பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள், கடந்த ஜீலை மாதம் 17 ம் தேதி ,இந்திய சீன எல்லையில் இந்திய வீரர்கள் 158 பேர் மரணமடைந்ததாக செய்திகள் வெளியிட்டது. முன்னதாக, சமூக வலைதளங்களில் வந்த வதந்தியை அப்படியே நம்பி, இந்த செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், உண்மையில் அதுபோல எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை.

இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் அரசு, இந்திய வீரர்கள் மரணமடைந்ததாக வந்த தவறான தகவலுக்கு கண்டனமும், அந்த செய்தியை உடனடியாக திரும்ப பெறுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பெம்ரா எனப்படும் பாகிஸ்தான் எலக்ட்ரானிக் மீடியா ரெகுலார்ட்டி அத்தாரிட்டி, வெளியிட்ட சுற்றறிக்கையில்,, கடந்த ஜீலை மாதம் 17ம் தேதி இந்திய வீரர்கள் பற்றி பாகிஸ்தான் ஊடகங்களில் வந்த செய்திகள் தவறானவை என்றும் உடனடியாக அச்செய்தியை திரும்பப் பெறுமாறும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறு திரும்பப் பெறாத செய்தி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி