ஆப்நகரம்

முதன் முறையாக ஹிந்து ஒருவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அசத்தல்

முதன் முறையாக முஸ்லீம் அல்லாத ஒருவர், அதுவும் இந்து மதத்தை சேர்ந்த மகேஷ் குமார் மலானி என்பவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

Samayam Tamil 28 Jul 2018, 6:28 pm
முதன் முறையாக முஸ்லீம் அல்லாத ஒருவர், அதுவும் இந்து மதத்தை சேர்ந்த மகேஷ் குமார் மலானி என்பவர் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
Samayam Tamil Mahesh Kumar Malani


பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஜூலை 25ம் தேதி நடந்தது. இந்த தேர்தல் முடிவு 26ம் தேதி முழுமையாக வெளியானது.

தேர்தெடுக்கப்பட்ட முதல் இந்து :
பாகிஸ்தானில் சிறுபான்மையினமாக இந்து மதத்தினர் உள்ளனர். இங்கு வாழும், பாகிஸ்தானி ஹிந்து ராஜஸ்தானி புஸ்கர்னா பிராமின் அரசியல்வாதி மகேஷ் குமார் மலானி, பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முதல் ஹிந்து என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் பிலாவால் பூட்டோ ஜர்தாரியின் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (Pakistan Peoples Party) சார்பாக போட்டியிட்டார் மகேஷ் குமார்.


இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜக்குல்லாவவை விட 18,323 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மகேஷ் குமார் மலானி 37,245 வாக்குகள் பெற்று சிறப்பான வெற்றியை பெற்றுள்ளார்.
பாகிஸ்தானில் 2002ல் இஸ்லாம் மதத்தை சாராதவரும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

மகேஷ் குமார் மலானி வகித்த பதவிகள் :

இந்நிலையில் மகேஷ் குமார் மலானி பாகிஸ்தான் எம்.பி.,யாக 2003-08 வரை பணியாற்றினார். அதேபோல் 2013ல் சிந்து மாகாண சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார்.

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

அடுத்த செய்தி