ஆப்நகரம்

நூதன முறையில் ஆயுதம் சப்ளை - பயங்கரவாதிகள் அட்டூழியம்!

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நூதன முறையில் ஆயுதங்களை சப்ளை செய்து வருகின்றனர்.

Samayam Tamil 19 Sep 2020, 5:36 pm

காஷ்மீரில் உள்ள பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆயுதங்கள், குண்டுகளை சப்ளை செய்வதற்காக பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதக் குழுக்கள் புதிய யுக்தியை கையாண்டுள்ளன.
Samayam Tamil drone


எல்லை பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதக் குழுக்கள் ஆயுதங்கள் மற்றும் குண்டுகளை ட்ரோனள் மூலம் சப்ளை செய்து வருகின்றன. இதற்காக எல்லைப் பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் ட்ரோன்கள் வந்து ஆயுதங்களை இறக்கிவிட்டு செல்கின்றன.

இதுதொடர்பாக தகவலறிந்த போலீஸார், ஆயுதங்களை எடுத்துச்சென்ற மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் புல்வாமா, ஷோபியன் ஆகிய இடங்களில் இருந்து ராஜவுரிக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்காக வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியா ஏரியாவில் வேவு பார்த்த சீன கப்பல் - உஷாரான இந்தியா!

நேற்று இரவு பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோன்கள் இரண்டு ஏகே-56 துப்பாக்கிகள், 6 ஏகே துப்பாக்கி மேகஸைன்கள், 180 குண்டுகள், 2 சீன கைத்துப்பாக்கிகள், 4 கையெறி குண்டுகள் உள்ளிட்டவற்றை இறக்கிவிட்டு சென்றுள்ளன.

இவ்விவகாரத்தில் புல்வாமாவை சேர்ந்த ரஹில் பஷிர், அமீர் ஜான், ஷோபியனை சேர்ந்த ஹஃபிஸ் யூனுஸ் வானி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எல்லையில் ட்ரோன்கள் மூலம் ஆயுதம் சப்ளை செய்யப்படுவது கண்டறியப்பட்டதை தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி