ஆப்நகரம்

பிப் 31 வரை பாஸ்போர் காலம் நீட்டித்து அலட்சியம் செய்த பாகிஸ்தான் அதிகாரிகள்

பாகிஸ்தான் நாட்டு குடிமகன் ஒருவருக்கு அலட்சியமாக பாஸ்போர்ட்டை பிப்ரவரி 31 வரை கால நீட்டிப்பு செய்துள்ளனர்.

TNN 13 Feb 2017, 9:04 pm
பாகிஸ்தான் நாட்டு குடிமகன் ஒருவருக்கு அலட்சியமாக பாஸ்போர்ட்டை பிப்ரவரி 31 வரை கால நீட்டிப்பு செய்துள்ளனர்.
Samayam Tamil pakistans officer extends passport validity to february 31
பிப் 31 வரை பாஸ்போர் காலம் நீட்டித்து அலட்சியம் செய்த பாகிஸ்தான் அதிகாரிகள்


பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தன் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதாக விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை பரிசீலித்த பாஸ்போர்ட் அதிகாரிகள், 2017ம் ஆண்டு பிப்ரவரி 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அனுமதி அளித்துள்ளனர். ஆனால் பிப்ரவரி மாதம் 28 நாட்கள் மட்டும் தான் வரும், லீப் ஆண்டுகளில் 29 நாட்கள் வரும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் அதிகாரிகள் பிப்ரவரி 31 வரை அனுமதி அளித்துள்ளனர்.

Welcome to Pakistan! They follow different calendar pic.twitter.com/FE2eNF5QTC — 🔱 SULTAN 💯 (@utpalghosh30) February 12, 2017
பிப்ரவரி 31 வரை காலாவதி தேதியை நீட்டித்து அதிகாரிகள் கையெழுத்திட்டு கொடுத்ததை, அந்த நபர் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் போட்டுள்ளது வைரலாகி வருகின்றது.

அரசு அதிகாரிகள் எந்த அளவுக்கு அலட்சியமாக செயல்படுகின்றனர் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி