ஆப்நகரம்

உலக மக்களின் ஆதரவால் மரண தண்டனையிலிருந்து தப்பிய கர்ப்பிணி பசு!

பல்கேரியாவைச் சேர்ந்த பென்கா என்ற கர்ப்பிணி பசுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது விலங்கின ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Jun 2018, 11:27 am
பல்கேரியாவைச் சேர்ந்த பென்கா என்ற கர்ப்பிணி பசுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது விலங்கின ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil உலக மக்களின் ஆதரவால் மரண தண்டனையிலிருந்து தப்பிய கர்ப்பிணி பசு!
உலக மக்களின் ஆதரவால் மரண தண்டனையிலிருந்து தப்பிய கர்ப்பிணி பசு!


ஐரோப்பிய நாடுகளில் தொற்று நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கால்நடைகள் வளர்ப்புக்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஐரோப்பிய ஆணைய வழிகாட்டுதலின் படி உரிய ஆவணம் இல்லாமல் கால்நடைகள் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஐரோப்பிய யூனியனில் உள்ள பல்கேரியாவைச் சேர்ந்த பென்கா என்ற பசு எல்லை தாண்டி அண்டை நாடான செர்பியாவிற்குள் நுழைந்தது. பின்னர் பசுவின் உரிமையாளரை கண்டுபிடித்து, அந்த பசு ஒப்படைக்கப்பட்டது. என்றாலும், எல்லை தாண்டி சென்றதால் நோய் தாக்குதல் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற அச்சத்தால், பென்கா பசுவை கொல்ல அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

ஆனால் பசு கர்ப்பமாக இருப்பதால் அதனை கொல்வதற்கு பல்கேரியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் பசுவை காப்பாற்றக்கோரி ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பிரபலங்களும், விலங்கின ஆர்வலர்களும் சமூகவலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்தனர். #SAVEPENKA என்ற ஹேஸ்டேக்கில், உலக அளவில் சமூக வலைதளங்களில் மக்கள் ஆதரவு குரல் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்ற பல்கேரிய அரசு, பசுவை பரிசோதித்து அதற்கு உடல்நிலை சீராக உள்ளதை உறுதி செய்து மரண தண்டனையை ரத்து செய்தது.

பென்கா பசு இன்னும் ஓரிரு வாரங்களில் கன்று ஈனும் தருவாயில் உள்ளது. இதனிடையே பசுவுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட சம்பவம் விலங்கின ஆர்வலர்களிடையேயும், மக்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி