ஆப்நகரம்

கத்துவா துயரம்: உலகம் முழுதும் பெருகும் கண்டனக் குரல்

கத்துவா துயரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு உலகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.கத்துவா துயரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு உலகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

Samayam Tamil 17 Apr 2018, 9:35 pm
கத்துவா துயரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு உலகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.
Samayam Tamil Da6W6fcW4AA20oN


ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் காணாமல் போனார். ஒரு வாரத்துக்குப் பின் ஒரு புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தபோது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

இது தொடர்பான வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை முன்னர் விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி தீபக் ஹாஜுரியா அண்மையில் சிறப்பு புலனாய்வுக்குழுவால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 18 வயதுக்கு உட்பட்ட மற்றொரு இளைஞரும் கைதானார்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் சர்வதேச கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்கள் இந்திய அரசு பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சாலைக்கு வந்து போராட்டம் நடந்தியுள்ளனர். பல்வேறு நாடுகளிலும் இதே போல இந்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் உள்ள விமான நிலையத்துக்கு வந்த சிலர் கத்துவா துயரத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைக்க வலியறுத்தும் வாசகங்கள் தாங்கி டீ-சர்ட் அணிந்திருந்தனர்.

“இந்தியாவில் பெண்களுக்கு பசுமாடுகளுக்கு அளிக்கும் மதிப்புகூட அளிக்கப்படுவதில்லை”, “இந்தியா பெண்களின் சுடுகாடு மாறிவிட்டது” என்பன போன்ற வாசகங்கள் அவர்களது டீ-சர்ட்டில் காணப்பட்டன.

அடுத்த செய்தி