ஆப்நகரம்

கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமராக உள்ளவர்கள் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதற்கும் மற்ற நாடுகளோடு கலாச்சார, வர்த்தக, பாதுகாப்பு உறவை வளர்த்துக் கொள்வதற்காக வெளிநாட்டு பயணம் செல்வார்கள். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டின் தலைவருக்கு வெளிநாட்டு பயணம் அவசியம்.

Samayam Tamil 13 Jun 2019, 8:47 am
பிரதமராக உள்ளவர்கள் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதற்கும் மற்ற நாடுகளோடு கலாச்சார, வர்த்தக, பாதுகாப்பு உறவை வளர்த்துக் கொள்வதற்காக வெளிநாட்டு பயணம் செல்வார்கள். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டின் தலைவருக்கு வெளிநாட்டு பயணம் அவசியம்.
Samayam Tamil modii333


ஆனால், “உலகம் சுற்றும் வாலிபன்” என வர்ணிக்கப்படும் பிரதமர் மோடி, இதற்கு முன்பு பிரதமராயிருந்தவர்களைக் காட்டிலும் அதிக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதனால் இவரது பயணத்தால் நாட்டிற்கு கிடைத்த பலன்கள் தொடர்பான விவாதங்கள் ஒருபுறம் நடைபெற, பிரதமர் மோடியின் மீதான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு சிவில் ஏவியேஷன், வங்கித்துறை, பாதுகாப்பு, ரீடெய்ல், பிராட்காஸ்டிங் போன்ற துறைகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் மோடி ஆட்சிக்கு வந்ததுமே பல துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு விதிகள் தளர்த்தப்பட்டன. மேலும் பல வெளிநாடுகளுக்கு சென்று மேக் இன் இந்தியா திட்டம் குறித்த விவரித்து அவர்களை இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்குவித்தார். அதற்கும் ஓரளவிற்கு பலன் இருந்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி இன்று காலை கிர்கிஸ்தான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய, சீன அதிபர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் நகரில் இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோரை சந்தித்துப் பேச பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

மாநாட்டில் பங்கேற்க வருகைதரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் மோடி பேச்சு நடத்த வாய்ப்பில்லை என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மோடியின் பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த அந்த நாடு அனுமதித்த போதும், ஈரான் மற்றும் ஓமன் வான்எல்லை வழியாக மோடி கிர்கிஸ்தான் செல்கிறார்.

அடுத்த செய்தி