ஆப்நகரம்

ஷாங்காய் மாநாடு: சீன பிரதமருடன் மோடி சந்திப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சீனப் பிரதமர் ஜிங்பிங்கை சந்தித்து இரு தரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்தைத நடத்தியுள்ளார்.

Samayam Tamil 9 Jun 2018, 5:36 pm
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சீனப் பிரதமர் ஜிங்பிங்கை சந்தித்து இரு தரப்பு உறவுகள் பற்றி பேச்சுவார்தைத நடத்தியுள்ளார்.
Samayam Tamil rtntyn


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18வது மாநாடு இன்றும் நாளையும் சீனாவின் கிங்டாவ் நகரில் நடைபெறுகிறது. இதில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு இந்த அமைப்பில் உறுப்பினரான இணைந்த இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் முறையாக இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றன. இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

இதற்காக சீனா சென்றுள்ள மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவரைச் சந்தித்துப் பேசினார். பின், அனைத்து தலைவர் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
மாலையில் சீன அதிபர் ஜிங்பிங்கைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு பற்றி பேசிய பிரதமர் மோடி, “இந்தச் சந்திப்பு உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அமைந்தது” என்றார்.

கடந்த ஏப்ரல் 27,28ஆம் தேதிகளில் இவ்விரு தலைவர்களும் சந்தித்து, ஆறு வாரங்கள் மட்டுமே கடந்த நிலையில் இந்த சந்திப்பு நிகழந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

அடுத்த செய்தி