ஆப்நகரம்

பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் மிக உயரிய விருது அறிவிப்பு!

பூடான் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 17 Dec 2021, 6:42 pm
பூடான் நாட்டின் தேசிய தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil கோப்பு


அண்டை நாடான பூடான் நாட்டின் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தனது நாட்டு மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் லோடே ஷேரிங் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பூடான் நாட்டின் 114வது தேசிய நாளான இன்று பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பூடான் அரசு அந்நாட்டின் மிக உயரிய விருதான் “நகடக் பெல் ஜி கோர்லோ” விருதை வழங்கப்பட உள்ளதாக பிரதமர் லோடே ஷேரிங் தெரிவித்து உள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் - மாநில அரசு சூப்பர் அறிவிப்பு!
இது தொடர்பாக பூடான் பிரதமர் லோடே ஷேரிங் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி விருதுக்கு மிகவும் தகுதியானவர். அவருக்கு பூடான் மக்களிடமிருந்து வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருக்கிறார். தனது நாட்டு மக்களுடனான அனைத்து தொடர்புகளிலும் உன்னதமான, ஆன்மிக மனிதனாக நரேந்திர மோடி பார்க்கப்படுகிறார். இந்த கவுரவத்தை நேரில் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம்.

மிக உயரிய சிவிலியன் விருதான நகடக் பெல் ஜி கோர்லோவுக்கு, நரேந்திர மோடியின் பெயரை அறிவிக்கும் போது மகிழ்ச்சி அடைந்தேன். பல ஆண்டுகளாக, குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் போதும் மோடியின் அளவற்ற நட்பும், ஆதரவும் தொடர்ந்து நீடிக்கிறது.
இவ்வாறு பூடான் பிரதமர் லோடே ஷேரிங் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த செய்தி