ஆப்நகரம்

கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர் திடீர் மரணம்!

கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பெண் திடீரென மரணமடைந்தது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Samayam Tamil 5 Jan 2021, 6:54 pm
நீண்ட முயற்சிகளுக்கு பிறகு கொரோனா தடுப்பூசிகள் தயாராகியுள்ளன. குறிப்பாக, ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி உலகளவில் பல நாடுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
Samayam Tamil Pfizer Vaccine


இந்த தடுப்பூசி பல கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு பொதுமக்களுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி போடப்பட்டவர்களில் சிலருக்கு லேசான பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை.

பாட்டு பாடினால் இலவசமா போகலாம்: டாக்ஸி ஓட்டுநரின் அசத்தல் ஆஃபர்!
இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டில் ஃபைசர் தடுப்பூசி போடப்பட்ட பெண் இரண்டு தினங்களுக்கு பின் உயிரிழந்துள்ளார். சோனியா அசிவேடோ என்ற 41 வயது பெண்மணிக்கு டிசம்பர் 30ஆம் தேதியன்று ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவர் புத்தாண்டு தினத்தன்று எதிர்பாராத விதமாக திடீரென மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சோனியாவுக்கு பெரிதளவில் உடல்நலக் கோளாறுகள் கிடையாது. மேலும், தடுப்பூசி போட்டபிறகு பக்கவிளைவுகளும் இல்லை என கூறப்படுகிறது.

உங்களுக்கு இவ்ளோ பெரிய மகனா?: பிரபல நடிகரை பார்த்து வியக்கும் ரசிகர்கள்
சோனியா மருத்துவ ஊழியராக பணிபுரிந்து வருவதால் அவருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தீடிரென மரணமடைந்தது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியளித்துள்ளது. சோனியாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி விளக்கம் அளிக்க வேண்டுமென அவரது தந்தை வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி