ஆப்நகரம்

பவுடர் அதிகமாக இருந்தால் அமெரிக்காவில் நுழைய தடை!

அதிக அளவு பவுடர் பொருட்களை வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்க விமானத்தில் பயணிக்க அனுமதி கிடையாது என்று அந்நாட்டு போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

Samayam Tamil 24 Jun 2018, 6:04 pm
அதிக அளவு பவுடர் பொருட்களை வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்க விமானத்தில் பயணிக்க அனுமதி கிடையாது என்று அந்நாட்டு போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
Samayam Tamil 59512564


அமெரிக்காவுக்கு விமானத்தில் செல்லும் பயணிகள் தங்களுடன் 350 கிராமுக்கு அதிகமாக பவுடர் பொருட்களை எடுத்து வந்தால் அவர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அந்நாட்டு போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், அவர்களுக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுக்கவும் வாய்ப்பு உள்ளது என்றும் இந்த கட்டுப்பாடு வரும் சனிக்கிழமை (ஜூன் 30) முதல் அமலாக உள்ளது என்றும் கூறியுள்ளது.

இதில், பவுடர் பொருட்கள் என்றால் முகப்பூச்சு பவுடர், தூள் செய்யப்பட்ட பொருட்கள், மாவுப்பொருட்கள் ஆகியவை அடங்கும்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவின் பல பகுதிகளுக்கு தினமும் பல இடைநில்லா விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஏர் இந்தியா மட்டும் நியூயார்க், சிகாகோ, நுவார்க், வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களுக்கு இடைநில்லா விமானங்களை இயக்குகிறது.

அமெரிக்காவிலிருந்தும் இந்தியாவின் டெல்லி, மும்பை ஆகிய நகரங்களுக்கு இடைநில்லா விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அடுத்த செய்தி