ஆப்நகரம்

ஐரோப்பிய எல்லைத் தாண்டிச் சென்று விதிமுறை மீறல்; கர்ப்பிணி பசுவிற்கு மரண தண்டனை விதிப்பு!

கர்ப்பிணி பசு எல்லைத் தாண்டிச் சென்றதால், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 4 Jun 2018, 5:26 pm
பல்கேரியா: கர்ப்பிணி பசு எல்லைத் தாண்டிச் சென்றதால், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil European Cow.


பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ். இவர் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது மந்தையில் இருந்த பென்கா என்ற கர்ப்பிணி பசு, இன்னும் 3 வாரங்களில் பிரசவிக்க உள்ளது.

இந்த சூழலில் மேய்ச்சலுக்கு சென்ற பென்கா, பல்கேரிய எல்லைத் தாண்டி, செர்பியாவிற்குள் நுழைந்தது. அது ஐரோப்பிய கண்டத்தில் இல்லாத நாடு. இந்நிலையில் ஐரோப்பிய ஆணைய வழிகாட்டுதலின் படி, உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும்.

அதன்படி, ஐரோப்பிய அதிகாரிகள் கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு, மரண தண்டனை விதித்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பென்காவிற்கு விலக்கு அளிக்கக்கோரி, ஆன்லைனில் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.

இதன்மூலம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பென்காவிற்கு விதிவிலக்கு பெற திட்டமிடப்பட்டுள்ளது.

Pregnant cow gets death sentence in Europe for crossing border.

அடுத்த செய்தி