ஆப்நகரம்

போப் ஆண்டவருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு!

வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திப்பு நடைபெற்றது.

TNN 24 May 2017, 9:09 pm
வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திப்பு நடைபெற்றது.
Samayam Tamil president donald trump meets pope francis at vatican
போப் ஆண்டவருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு!


கடந்த ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப், அமெரிக்கா, மெக்சிகோ இடையே தடுப்புச் சுவர் அமைப்பேன் எனக் கூறிவந்தார். ஆனால், இதற்கு போப் பிரான்சிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடர்ந்து நிலவி வந்தது. இந்நிலையில், அதிபராக பதவியேற்ற டிரம்ப், தற்போது வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சவூதி அரேபியா சென்ற அவர், தற்போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒருபகுதியாக, வாடிகன் நகர் சென்று, கத்தோலிக்கர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் உடன் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

கருத்து வேறுபாடு இருந்த நிலையில், இருவரும் சந்தித்துப் பேசியது முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் நல்வாழ்வை கருத்தில்கொண்டு, அவர்களின் பிரதிநிதியாக, போப் ஆண்டவரை சந்தித்துப் பேசியதாக, டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னதாக, டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளித்த போப் பிரான்சிஸ், உலகின் ஆக்கப்பூர்வ வளர்ச்சிக்கு, டிரம்ப் தலைமையேற்றுச் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை கூறியது குறிப்பிடத்தக்கது.

போப் பிரான்சிஸ் உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு! #PopeFrancis #USA #Trump #Vatican #SamayamTamil pic.twitter.com/sux6ttO4wg — Samayam Tamil (@SamayamTamil) May 24, 2017

அடுத்த செய்தி