ஆப்நகரம்

வடகொரிய அதிபர் ஒரு சைக்கோ..!டிரம்ப் அதிரடி டூவிட்..!

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

TNN 23 Sep 2017, 8:36 pm
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
Samayam Tamil president of north korea is a psycho trump
வடகொரிய அதிபர் ஒரு சைக்கோ..!டிரம்ப் அதிரடி டூவிட்..!


வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தன் சொந்த மக்கள் வறுமையில் வாடுவதையும், ஆயுதங்களால் கொல்லப்படுவது பற்றியும் துளியும் கூட கவலைப்படாத மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முன்னெப்போதும் சந்தித்திராத பேரழிவை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தப்போவதாக வடகொரிய அதிபர் மிரட்டல் விடுத்திருந்தார்.

ஏற்கெனவே வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், டொனால்ட் ட்ரம்ப் ஒரு பைத்தியகாரன் என்று விமர்சித்திருந்த நிலையில், கிம் ஜோங் உன், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அமெரிக்க அதிபர் கூறியிருப்பது உலக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

President of north korea is a psycho-trump

அடுத்த செய்தி