ஆப்நகரம்

பீஸ் பள்ளிகள்: விசாரணை நடத்த வங்கதேச அரசு உத்தரவு

வங்கதேசத்தில் "பீஸ்" என்ற பெயரில் இயங்கி வரும் பள்ளிகளில் விசாரணை நடத்த அந்நாட்டு உளவுத்துறைக்கு வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 13 Jul 2016, 8:40 pm
டாக்கா: வங்கதேசத்தில் "பீஸ்" என்ற பெயரில் இயங்கி வரும் பள்ளிகளில் விசாரணை நடத்த அந்நாட்டு உளவுத்துறைக்கு வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil probe on peace schools bangladesh govt orders
பீஸ் பள்ளிகள்: விசாரணை நடத்த வங்கதேச அரசு உத்தரவு


வங்கதேச தலைநகர் டாக்காவில் இளம் வயது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார்.

இதனால் அவர் ஜாகிர் நாயக்கின் பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்கதேச அரசு கேட்டுக் கொண்டது.

இதனிடையே, ஜாகிர் நாயக் நடத்தி வந்த தொலைகாட்சியான பீஸ் தொலைகாட்சியை வங்கதேச அரசு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தடை செய்தது.

இந்நிலையில், வங்கதேச தலைநகர் டாக்காவில் ''பீஸ்'' என்ற பெயரில் இயங்கி வரும் பள்ளிகளுக்கும், ஜாகீர் நாயக்கிற்கும் தொடர்புள்ளதா என விசாரணை நடத்த அந்நாட்டு உளவு துறைக்கு வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி