ஆப்நகரம்

அம்பலமானது கத்தார் இளவரசியின் அந்தரங்கம்

இங்கிலாந்தில் ஆடம்பர விடுதி ஒன்றில் 7 ஆண்டுகளுடன் கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா தங்கியுருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

TNN 25 Aug 2016, 1:22 am
இங்கிலாந்தில் ஆடம்பர விடுதி ஒன்றில் 7 ஆண்டுகளுடன் கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா தங்கியுருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
Samayam Tamil qatar princess sheikha salwas sexual scandal with seven men
அம்பலமானது கத்தார் இளவரசியின் அந்தரங்கம்


இங்கிலாந்தின் பாதுகாப்புப் படையினரும் ஸ்கார்ட்லார்ந்து காவல்துறையினரும் லண்டனில் உள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் கூட்டு சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அந்த விடுதில் உள்ள அறை ஒன்றில் 7 ஆண்களுடன் ஒரு பெண் தங்கியிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தப் பெண்ணிடம் உள்ள அடையாள அட்டையைக் கைப்பற்றி அவரிடம் விசாரணை செய்த போது அவர் கத்தார் இளவரசி ஷெய்கா சால்வா என்று தெரியவந்துள்ளது.

கத்தார் இளவரசி லண்டனில் 7 ஆண்களுடன் ஒரே அறையில் தங்கியிருப்பதாக இங்கிலாந்தில் உள்ள கத்தார் தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து கத்தார் அரசு சார்பில் எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், கத்தார் இளவரசி மீதான இந்த அவதூறுச் செய்தி பொய்யானது என்றும் ஃபோட்டா ஷாப் மூலம் முகத்தை மாற்றிவைத்து வெளியிடப்பட்டுள்ளது என்றும் ஹைதர்ராபாத்தில் உள்ள இஸ்லாமிய செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, கத்தார் இளவரசி பற்றிய அவதூறுச் செய்தியை முதலில் வெளியிட்ட இங்கிலாந்து செய்தி நிறுவனம் தனது இணைய தளத்திலிருந்து அந்த செய்தியை நீக்கியுள்ளது.

ஷெய்கா சால்வா முன்னாள் கத்தார் பிரதமர் ஹமது பின் ஜச்சிம் பின் ஜபோர் அல் தானியின் மகளாவார்.

அடுத்த செய்தி