ஆப்நகரம்

இந்தியானா டேலண்ட்; அதுக்கு உதாரணம் கணிதமேதை ராமானுஜன்: புகழாரம் சூட்டிய இஸ்ரேல் பிரதமர்...!

இந்தியாவின் திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது கணிதமேதை ராமானுஜன் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.

TNN 5 Jul 2017, 6:39 pm
டெல் அவிவ்: இந்தியாவின் திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது கணிதமேதை ராமானுஜன் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
Samayam Tamil ramanujan is the example for talented india says israel pm
இந்தியானா டேலண்ட்; அதுக்கு உதாரணம் கணிதமேதை ராமானுஜன்: புகழாரம் சூட்டிய இஸ்ரேல் பிரதமர்...!


பிரதமர் நரேந்திர மோடி, 3 நாட்கள் சுற்றுப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அதன்மூலம் இஸ்ரேல் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை, அவர் பெற்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டர். இதையடுத்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இருநாட்டு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அதில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியானா ரொம்ப டேலண்ட் என்று கூறினார். அதற்கு ஒரு உதாரணம் கணிதமேதை ராமானுஜன் என்று குறிப்பிட்டார். இந்தியாவுடனான உறவு குறித்து பெருமை கொள்வதாக அவர் தெரிவித்தார்.

Ramanujan is the example for Talented India says Israel PM.

அடுத்த செய்தி