ஆப்நகரம்

மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் ராமர் பாலம்.!

ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் அது கட்டுக்கதை இல்லை எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

TNN 13 Dec 2017, 10:36 am
ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் அது கட்டுக்கதை இல்லை எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
Samayam Tamil ramar bridge made by humans
மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் ராமர் பாலம்.!


ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற ராமருக்காக வானர சேனைகள் அந்த பாலத்தை கட்டியதாக நம்பப்படுகிறது.

ஆனால், ராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை என்றும், கடலுக்கு அடியில் இயற்கையாக அமைந்த மணல் திட்டுகள் இப்படி பாலமாக தோன்றியதாகவும் ஒருதரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல, அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில், இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டறிந்துள்ளனர்.

ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுகளை வைத்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ஓரிகன் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ் கூறியதாவது;

ராமர் பாலம் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள மணல் திட்டுகள் வேண்டுமானால், இயற்கையாக உருவானவையாக இருக்கலாம். ஆனால் அங்குள்ள சுண்ணாம்புக்கல் பாறைகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். அவை 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்றும் செல்சியா ரோஸ் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி