ஆப்நகரம்

பாலியல் பலாத்காரம்: அமெரிக்கருக்கு ஜப்பானில் சிறை

பாலியல் பலாத்கார வழக்கில் அமெரிக்க கடற்படை மாலுமிக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜப்பான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 16 Jul 2016, 1:42 am
டோக்யோ: பாலியல் பலாத்கார வழக்கில் அமெரிக்க கடற்படை மாலுமிக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஜப்பான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil rape case us navy sailor gets jail in japan
பாலியல் பலாத்காரம்: அமெரிக்கருக்கு ஜப்பானில் சிறை


ஜப்பானின் ஒகினாவா தீவில் அமெரிக்க கடற்படை தளம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 50,000 அமெரிக்கர்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அத்தீவின் நாகா மாவட்டத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில், ஜப்பானிய பெண் ஒருவரை அமெரிக்க கடற்படை மாலுமி ஜஸ்டின் காஸ்டெல்லானோஸ் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ஜஸ்டின், தனது அறைக்கு வெளியில் போதையில் தூங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரை தனது அறைக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

முன்னதாக இதே ஒகினாவா தீவிவில் அமெரிக்க கடற்படையை சேர்ந்தவர், பெண் ஒருவரை பாலியல் பலாத்கார கொலை செய்ததையடுத்து, அங்கு பெரும் போராட்டம் நடைபெற்றது.

இதனிடையே, இச்சம்பவத்திற்கு எதிராகவும் அப்பகுதி மக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், ஜஸ்டின் காஸ்டெல்லானோஸுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஒகினாவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 21,789 அமெரிக்க டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், மது அருந்தியதற்கும், ஜஸ்டினின் அறைக்கு வெளியே போதையில் தூங்கியதற்கும் அப் பெண்ணிடம், நீதிமன்றம் தனது காட்டத்தை காண்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி