ஆப்நகரம்

அமெரிக்கா நியூஜெர்சியில் முதன் முதலாக மேயர் ஆன சீக்கியர்

அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி மாகாணத்தின் ஹோபேக்கன் நகரின் புதிய மேயராக முதன் முதலாக சீக்கிய மதத்தைச் சேர்ந்த ரவீந்தர் பல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

TNN 9 Nov 2017, 6:13 am
அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி மாகாணத்தின் ஹோபேக்கன் நகரின் புதிய மேயராக முதன் முதலாக சீக்கிய மதத்தைச் சேர்ந்த ரவீந்தர் பல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil ravinder bhalla becomes first sikh mayor of hoboken
அமெரிக்கா நியூஜெர்சியில் முதன் முதலாக மேயர் ஆன சீக்கியர்

அமெரிக்காவில் பலத்த போட்டிக்கு பின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவர், அங்குள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்தவர். மேலுமு், லூசியானிாவில் டுலோனே சட்டப்பள்ளியில் படித்து ஜூரிஸ் டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக, ரவீந்தர் அமெரிக்காவில் நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும் வகித்து வந்த நிலையில், தற்போது, மேயர் பதவிக்குப் போட்டியிட்டார்.

அவருக்கு ஆதரவாக முன்னாள் மேயர், டான்ஜிம்மராலும் இருந்ததால், வெற்றி வாய்ப்பு எளிதானது.

இது குறித்து ரவீந்தர் கூறுகையில், நன்றி ஹேபோக்கன். உங்களுக்கு மேயராக சேவையாற்ற ஆர்வமாக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி