ஆப்நகரம்

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விண்ணப்பப் படிவம்...

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட, இந்தியத் தூதரக வலைதளத்தில் விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Apr 2020, 8:47 am
வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட, இந்தியத் தூதரக வலைதளத்தில் விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil world map


இந்தியத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவங்கள் மூலம், வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் இந்தியா வருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையைப் பெற முடியும் என்றும், அவரகளை நாடுகளுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை எடுக்க முடியும் என்றும் இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “ வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களின் பட்டியலைத் தயாரிக்க இந்திய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களைச் சொந்த நாடுகளுக்கு திரும்ப அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் தொடர்பு கொண்டு முன்னெடுக்க முடியும். ” என்று தெரிவித்தார்.

மேலும், “கொரோனா வைரஸ் பாதிப்பின் பரவலுக்குப் பிறகு, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தங்கள் மாநில மக்களை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்று மாநிலங்களின் தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கான பணிகளை இந்திய அரசு தொடங்கியுள்ளது” என்றும் தெரிவித்தார்.

மாணவர்களை அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்கள், பணியாளர்களை அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்கள் என வரிசைப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எங்களை சொந்த ஊருக்கு அனுப்புங்க... வெளிமாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவில் இருந்து இந்தியா வரவேண்டியவர்களின் எண்ணிக்கை இதுவரை தெளிவாகத் தெரியாத நிலையில், நியூயார்க் பகுதியில் இருந்து மட்டும் 1 மில்லியனுக்கும் (10 லட்சம்) மேற்பட்டோர் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வான்வழிப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டிருப்பதால்,ஏராளமான இந்தியர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல், சிக்கித்தவித்து வருகின்றனர். இந்நிலையில், மீட்பு நடவடிக்கைகளைத் திட்டமிட இந்தக் கணக்கெடுப்பு பெரிதும் உதவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்னப்பப் படிவங்கள் இந்தியத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை (ஏப்ரல்,30) மாலைக்குள் இந்த கணக்கெடுப்பு முடிந்து தகவல்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி