ஆப்நகரம்

மியான்மரில் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

மியான்மர் நாட்டில் புத்த மதக்குழுவைச் சேர்ந்த சிலர், மசூதி ஒன்றை இடித்து, தரைமட்டமாக்கியுள்ளனர். இதனால், பெரும் மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

TNN 25 Jun 2016, 6:11 pm
மியான்மர் நாட்டில் புத்த மதக்குழுவைச் சேர்ந்த சிலர், மசூதி ஒன்றை இடித்து, தரைமட்டமாக்கியுள்ளனர். இதனால், பெரும் மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil religious tensions bristle in myanmar after mosque destroyed
மியான்மரில் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

அந்நாட்டில் புத்த மதத்தினர் பெரும்பான்மை மக்களாக வாழ்கின்றனர். அதேசமயம், முஸ்லீம் மற்றும் இதர மதத்தினர் சிறுபான்மையாக உள்ளனர். இதில், முஸ்லீம் மக்கள் மீது அவ்வப்போது, தாக்குதல் நடத்தப்படுவது வழக்கமாகியுள்ளது.

இந்நிலையில் அங்குள்ள பேகோ மாகாணத்தில் முஸ்லீம் மதத்தினருக்காக, பள்ளிக்கூடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, அருகில் வசிக்கும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த புத்த மதத்தினர், பெருங்கூட்டமாக திரண்டுவந்து, அங்கிருந்த மசூதியை இடித்து, தரைமட்டமாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தால், இரு மத மக்களிடையே பெரும் மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஏராளமான போலுசார் குவிக்கப்பட்டு, பேகோ மாகாணம் முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி