ஆப்நகரம்

இலங்கை விஷயத்தில் மீண்டும் தமிழர்களின் காலை வாரியது இந்தியா!

விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரில் மனித உரிமை மீறப்பட்டதாக இலங்கை மீது எழுந்த குற்றம் விசாரிக்க மேலும் 2 ஆண்டு அவகாசம் வேண்டும் என இலங்கை கேட்டதற்கு இலங்கைக்கு இந்தியா ஆதரவாக செயல்பட்டுள்ளது.

TNN 24 Mar 2017, 12:02 pm
ஜெனீவா : விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரில் மனித உரிமை மீறப்பட்டதாக இலங்கை மீது எழுந்த குற்றம் விசாரிக்க மேலும் 2 ஆண்டு அவகாசம் வேண்டும் என இலங்கை கேட்டதற்கு இலங்கைக்கு இந்தியா ஆதரவாக செயல்பட்டுள்ளது.
Samayam Tamil resolution on sri lanka at unhrc passed without a vote
இலங்கை விஷயத்தில் மீண்டும் தமிழர்களின் காலை வாரியது இந்தியா!


இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின் போது, சிங்கள ராணுவம் மனித உரிமைகளை மீறியதாகவும், இலங்கை மீது போர் குற்ற நடவடிக்கை குறித்து விசாரிக்க வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. ஆனால் இலங்கை அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கையில் விடாமல், நாங்களே விசாரணை நடத்திக்கொள்கிறோம் என கூறியது.

இந்த மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா கவுன்சில் கூட்டம் நேற்று ஜெனிவாவில் நடந்தது. இதில் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துதல், நல்லிணக்கம், பொறுப்பு கூறல் என்ற பெயரில் அமெரிக்கா, இங்கிலாந்து, மாசிடோனியா, மாண்டனெக்ரோ உள்ளிட்ட நாடுகள் சார்பாக தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் வேண்டும் என்ற இலங்கையின் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.இலங்கைக்கு சாதகமாக தாக்கல் செய்த தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என தமிழக கட்சிகள் வற்புறுத்தி வந்தன.

ஆனால் இந்த தீர்மானத்திற்கு 40 நாடுகள் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானம் குறித்து கானா நாடு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இந்தியா தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி