ஆப்நகரம்

இனிமே ஆன்-லைனில் வாங்குவீங்க.... ‘பீட்சா’வில் எச்சில் துப்பிய உணவக பணியாளர்!

வாடிக்கையாளருக்கு கொண்டு சென்ற பீட்சாவில் எச்சில் துப்பிய உணவக பணியாளர் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 26 Sep 2018, 6:58 pm
சமூக வலைதளத்தில் அமெரிக்காவில் உணக பணியாளர் ஒருவர் வாடிக்கையாளருக்கு வழங்கிய வேண்டிய பீட்சாவில் எச்சில் துப்பி, அதை ஷாஸ் கொண்டு மறைக்கும் வீடியோ வைரலாக பரவியது.
Samayam Tamil 3


இந்த வீடியோவில் உள்ளவர் கெர்லி என தெரியவந்தது. இந்த வீடியோவைப்பார்த்த உரிமையாளர் உடனடியாக அவரை வேலையில் இருந்து நீக்கியதோடு, போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இதான் காரணம்.....
இந்நிலையில் கெர்லி ஒரு நல்ல நோக்கத்துக்காக இந்த வீடியோவை வெளியிட்டதாக அவருடன் வேலை செய்யும் மே என்பவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மே கூறுகையில், ‘கெர்லி ஒரு நல்ல நோக்கத்துக்காகத்தான் இந்த செயலை செய்தார். ஆனால் அது அவருக்கே வினையாக முடிந்தது. முன்பு பல பணியாளர்கள் இது போல கேவலமான செயலை செய்துள்ளனர். அதை மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த தான் இது போல வீடியோ பதிவு செய்து அதை வெளியிட்டார். ஆனால் இதை மேனேஜர்கள் கேட்க தயாராக இல்லை.’ என்றார்.

அடுத்த செய்தி