ஆப்நகரம்

வணிக வளாக பாதுகாப்புப் பணியில் ரோபோ... அசத்தும் அபுதாபி!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு அங்கமான அபுதாபியில் பிரபல வணிக வளாகத்தில் நவீன ரோபோ பாதுகாப்பு பணியை மேற்கொண்டு அசத்தி வருகிறது.தன்னுள் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் முககவசம் அணியாதவர்களை இந்த ரோபா கண்டுபிடித்துவிடுவதுதான் இதன் ஹைலைட்.

Samayam Tamil 2 Sep 2020, 11:02 pm
அபிதாபியில் உள்ள பிரபல யாஸ் மால் வணிக வளாகத்தில் புதிய முயற்சியாக நவீன ரோபோ பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நான்கு சக்கரங்களுடன் வணிக வளாகத்தை வலம் வரும் இந்த ‘ரோபோ’ பாதுகாவலர் வாடிக்கையாளர்களின் நடமாட்டத்தை மிக நுட்பமாக கண்காணிக்கிறது.
Samayam Tamil robot


இதற்காக இதன் முகபகுதியில் ஏழு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் உடல் வெப்பநிலையை துல்லியமாக கணித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விடுகிறது.

ஷாப்பிங் மாலுக்கு யாராவது முகக்கவசம் அணியாமல் வந்தால் அவர்களை சரியாக அடையாளம் கண்டுபிடித்து நிர்வாகத்திடம் போட்டு கொடுத்துவிடவும் செய்கிறது. வணிக வளாகத்துக்குள் வழி தெரியாமல் தவிப்போர் இதனை அணுகினால், அவர்களுக்கு சரியான வழியையும் காட்டுகிறது.

India-England Bus: மீண்டும் தொடங்கும் இந்தியா-இங்கிலாந்து பேருந்து சேவை

வளாகத்துக்குள் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை கட்டுப்படுத்துவது, சந்தேகத்துக்கிடமான வகையில் கீழே பைகள் கிடந்தாலோ, எங்காவது புகை, நெருப்பு வந்தாலோ அவை குறித்து உடனடியாக தகவல் கொடுத்துவிடுகிறது.

இப்படி சகலகலா வல்லவனாக அசத்திவரும் ரோபோவை காண்பதற்காகவே, தற்போது யாஸ் மால் வணிக வளாகத்துக்கு வாடிக்கையாளர்கள் படையெடுத்து வருகின்றனர்.

அடுத்த செய்தி