ஆப்நகரம்

கோவிட்-19 தடுப்பூசி ரெடி... வண்டியில் ஏறும் ரஷ்யா

கோவிட்-19 தடுப்பூசி பயன்படுத்த தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Samayam Tamil 21 Jul 2020, 7:01 pm

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பு மருந்து இரண்டாம் கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசி நோயாளிகளுக்கு பயன்படுத்த தயாராக இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு இணையமைச்சர் ரஸ்லன் த்ஸலிகோவ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil கோவிட்-19 தடுப்பூசி


இரண்டாம் கட்ட பரிசோதனையில் பங்குபெற தாமாக முன்வந்தவர்களுக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. அவர்கள் அனைவருக்குமே நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்துள்ளதாகவும், நிவாரணத்தை உணர்ந்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்ட சோதனை எப்போது நடக்கும் என்பது பற்றிய தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை. மேலும், இந்த தடுப்பு மருந்து உற்பத்தி எப்போது தொடங்கும் என்பது பற்றியும் அவர் தகவல் அளிக்கவில்லை. தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக ரஷ்ய அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.
டிசம்பரில் சந்தைக்கு வரும் கொரோனா தடுப்பூசி?!

நோவோசிபிர்ஸ்க் நகரில் இயங்கி வரும் அரசு வைராலஜி மையத்தை சேர்ந்த முன்னாள் தலைமை அதிகாரி செர்கீ நெட்சோவ், “தடுப்பு மருந்து விவகாரத்தில் மிக வேகமாக நடந்துகொள்கின்றனர். மூன்றாம் கட்ட பரிசோதனை இன்னும் தொடங்கவில்லை. அதுபற்றி அறிவிப்பும் இல்லை. இவ்வளவு அவசரத்திற்கு என்ன காரணம் என்பது புரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

உலகிலேயே அதிக கொரோனா பாதிப்பை கொண்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கிறது. ஆகையால், பரிசோதனை, தடுப்பு மருந்துக்கான நிதி என பல நடவடிக்கைகளை ரஷ்யா முடுக்கிவிட்டுள்ளது. மேலும், கோவிட்-19 மருந்துக்கு உலகளவில் கடும் போட்டி இருப்பதால் ரஷ்யா தனது பங்கிற்கு சோதனை முயற்சிகளை வேகப்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி: நல்ல செய்தி சொல்லும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்!!

அடுத்த செய்தி