ஆப்நகரம்

ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் அபார வெற்றி

ரஷ்ய அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின் மீண்டும் வெற்றி பெற்று பதவியைத் தக்கவைத்துள்ளார்.

Samayam Tamil 19 Mar 2018, 7:07 am
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின் மீண்டும் வெற்றி பெற்று பதவியைத் தக்கவைத்துள்ளார்.
Samayam Tamil russia election vladimir putin wins by big margin
ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் அபார வெற்றி


ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடினின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று தொடங்கியது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இதற்கான வாக்குப்பதிவு நடந்தது. இதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

இதில் 76% வாக்குகளை அள்ளிய புடின் அபார வெற்றி பெற்று தனது பதவியை தக்கவைத்துள்ளார். இதன் மூலம் அடுத்த 6 ஆண்டுகள் புடின் ரஷ்ய அதிபர் பதவியில் தொடர்வார்.

கடந்த 2000ம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக அதிபரானார் புடின். பின், 18 ஆண்டுகளாக ரஷ்யாவின் மேலாதிக்க தலைவராக இருந்து வருகிறார். இத்தேர்தலில் அவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். உலக அளவில் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின் படி புடின் எதிர்ப்புகளைத் தகர்த்து மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி