ஆப்நகரம்

கொரோனா தடுப்பூசி போட்டா குரங்கா மாறிடுவோமா? என்னய்யா சொல்றிங்க?

கொரோனா தடுப்பூசி போட்டால் குரங்காக மாறிவிடுவோம் என பொய் பிரச்சாரங்கள் எழுந்துள்ளன.

Samayam Tamil 16 Oct 2020, 4:21 pm

கடந்த சுமார் 10 மாதங்களாக கொரோனா வைரஸ் மனித இனத்தையே பல்வேறு நெருக்கடிகளுக்குள் தள்ளியிருக்கிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தாண்டி நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும், உயிர்பலிகளும் அதிகரித்து வருகின்றன.
Samayam Tamil Fake news outlets claim


கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என்ற மனநிலை பரவலாகியுள்ளது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா, சீனா என பல்வேறு நாடுகள் மிகத் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.

இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம்-ஆஸ்ட்ராஜெனகா கூட்டணியில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. உலகளவில் முன்னணியில் இருக்கும் கொரோனா தடுப்பூசிகளில் இதுவும் ஒன்று. ஏற்கெனவே ரஷ்யா தனது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்துள்ளது.

இனி 5 நிமிடத்தில் கொரோனாவை கண்டுபிடிச்சிடலாம்!

ரஷ்யாவின் தடுப்பூசிக்கு ஸ்புட்னிக் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி குறித்து ரஷ்யாவை சேர்ந்தவர்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதாவது, ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசியை போட்டுக்கொண்டால் குரங்காகிவிடுவோம் என சமூக வலைதளங்களில் மீம்ஸ், வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது.

ரஷ்யாவின் தடுப்பூசிக்கு போட்டியாக இருக்கக்கூடாது என்பதற்காக இதுபோன்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே தடுப்பூசிகளுக்கு எதிராக இருக்கும் கூட்டமும் இதை பிடித்துக்கொண்டு பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பஸ்கர் சொரியோட் தி டைம்ஸ் ஊடகத்திடம் பேசியபோது, “பொய் தகவல்கள் பொது சுகாதாரத்திற்கு மிக ஆபத்தானவை. தகவல்களை சரிபார்க்கும்படி அனைவரையும் வலியுறுத்துகிறேன்.

தடுப்பூசிகள், மருந்துகளால் மனித இனம் பெற்றுள்ள ஏராளமான பயன்களை நினைவுகூர வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி