ஆப்நகரம்

சவூதியில் ஆண்களோடு சரக்கடித்து ஆட்டம் போட்ட இளம்பெண் கைது!

சவூதி அரேபியாவில், ஆண்களோடு சேர்ந்து மது அருந்திவிட்டு, குத்தாட்டம் போட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

TNN 27 Dec 2016, 2:33 pm
சவூதி அரேபியாவில், ஆண்களோடு சேர்ந்து மது அருந்திவிட்டு, குத்தாட்டம் போட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil saudi arabia moral police arrest women filmed drinking dancing with men
சவூதியில் ஆண்களோடு சரக்கடித்து ஆட்டம் போட்ட இளம்பெண் கைது!


அந்நாட்டில் சமூக வாழ்க்கை மற்றும் பெண்கள் பழக்க வழக்கம் தொடர்பாகக் கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளன. மேலும், மது அருந்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், சட்டவிரோதமான முறையில் அவ்வப்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளம் வயதினர் மது அருந்தி, சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

இந்நிலையில், இளம்பெண் ஒருவர் மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் ஆண்கள் பலரோடு ஆடுவதைப் போன்ற வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இது வைரலாகப் பரவிய நிலையில் அந்த பெண் சவூதி அரேபியாவை சேர்ந்தவர் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

குறிப்பிட்ட பெண் மட்டுமின்றி, மேலும் பல இளம்பெண்களும், இளைஞர்களும் மது அருந்திவிட்டு, வீட்டின் மொட்டைமாடியில் உற்சாகமாக நடனமாடியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, வீடியோ காட்சிகளின் அடிப்படையில் ஜெத்தா பகுதியில் வசித்துவரும் அந்த இளம்பெண்ணை சுற்றிவளைத்த போலீசார், கைது செய்துள்ளனர்.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று ஜெத்தா பகுதி போலீஸ் தலைவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Jeddah: Saudi’s moral police have arrested women who were allegedly among those seen ‘drinking and dancing with men’ in a video that has upset the extremely conservative Muslim state.

அடுத்த செய்தி