ஆப்நகரம்

மக்கா மசூதியில் விபத்து: யாத்ரீகர்கள் அதிர்ச்சி!

மக்கா மசூதியில் காரை மோதி விபத்து ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 31 Oct 2020, 10:20 pm

இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படும் சவுதி அரேபியாவின் மக்கா மசூதியில் ஒருவர் காரை மோதி சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil Mecca Mosque


நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் காரை வேகமாக ஓட்டி மசூதியின் நுழைவு கேட்டில் மோதியுள்ளார். மசூதி வாயிலுக்கு முன் வைக்கப்பட்டிருந்த வேலியையும் இடித்து தள்ளிவிட்டு அவர் நேராக மசூதியில் காரை மோதியது வீடியோவாக பதிவாகியுள்ளது.



சம்பந்தப்பட்ட நபரை துரத்தி பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர் இயல்புக்கு மாறான மனநிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் மசூதி கேட்டில் இருந்து அந்த காரை பாதுகாப்பு படையினர் அப்புறப்படுத்தினர்.

இந்த மாபெரும் மசூதிக்குள் புனித காபா இருக்கிறது. இஸ்லாமியர்களின் உச்சபட்ச புனித தலமான இந்த மசூதியை நோக்கி இஸ்லாமிய மக்கள் தினம் ஐந்து முறை தொழுகை செய்வர். கொரோனா பாதிப்பால் இந்த மசூதி மூடப்பட்டிருந்தது.

கொரோனா மரணங்களுக்கு மருத்துவர்கள்தான் காரணம்: ட்ரம்ப் குற்றச்சாட்டு!

தற்போது பாதுகாப்பு வழிகாட்டலுடன் படிப்படியாக யாத்ரீகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து நடைபெற்றபோதும் மசூதிக்குள் சிலர் தொழுகை நடத்தியிருக்கின்றனர். மசூதியில் காரை மோதிய நபரின் பெயரை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

தற்போது 15,000 பேருக்கு மட்டும் மசூதிக்குள் தொழுகை செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் 20,000 பேருக்கு தொழுகை செய்ய அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி