ஆப்நகரம்

அந்தரங்க புகைப்படங்களை கசியவிட்டது சவூதி அரேபியாதான் என குற்றச்சாட்டு

அமேசான் நிறுவன சிஇஓ ஜெஃப் பெசோசின் சில அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் கசிந்தது தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், சவூதியைச் சேர்ந்தவர்களால் அவரது செல்போன் ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்தே தகவல் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 31 Mar 2019, 2:37 pm
அமேசான் நிறுவன சிஇஓ ஜெஃப் பெசோசின் சில அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் கசிந்தது தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், சவூதியைச் சேர்ந்தவர்களால் அவரது செல்போன் ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்தே தகவல் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Jeff_Bezos_close_up.1910x1000

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜெஃப் பெசோசின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான கெவின் டி பெக்கெர் உள்ளிட்ட வல்லுநர் குழு இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.

அதே நேரம் சவூதி அரசின் எந்த பிரிவு இதனை ஹேக் செய்து கசியவிட்டது என்கிற முழு விபரத்தை அந்த விசாரணைக்குழுவினர் தெளிவுபட விளக்கவில்லை.

ஜெஃப் பெசோசின் “வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையில் சவூதி இளவரசருக்கு எதிராக செய்திகள் வெளியிடப்பட்டதால் அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி