ஆப்நகரம்

பெண்கள் பைக், ட்ரக் ஓட்ட அனுமதியளித்தது சவூதி அரசு!

சவூதி அரேபியாவில் பெண்கள் பைக் மற்றும் ட்ரக் போன்ற வாகனங்களை ஓட்ட முதல்முறையாக சவூதி அரசாங்கம் அனுமதியளித்துள்ளது

TNN 17 Dec 2017, 1:01 pm
சவூதி அரேபியா: சவூதி அரேபியாவில் பெண்கள் பைக் மற்றும் ட்ரக் போன்ற வாகனங்களை ஓட்ட முதல்முறையாக சவூதி அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
Samayam Tamil saudi women will now be allowed to drive motorcycles and trucks
பெண்கள் பைக், ட்ரக் ஓட்ட அனுமதியளித்தது சவூதி அரசு!


முஸ்லீம் நாடான சவூதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெண்கள் பள்ளி செல்ல, வெளியே பயணிக்க என எதற்கும் ஆண்களின் அனுமதி இருந்தால் மட்டுமே முடியும். உலகிலேயே சவூதி அரேபியாவில் மட்டும்தான் பெண்கள் வாகனங்களை ஓட்ட அரசு அனுமதியளிக்காமல் இருந்தது.

பல பெண் ஆர்வலர்களின் போராட்டங்களுக்குப் பிறகு, சவூதி அரசர் சல்மான் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அதற்கான தடையை நீக்கினார். சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த முடிவை அனைவரும் வரவேற்றனர்.

இந்நிலையில், தற்போது சவூதி அரசாங்கம் பெண்கள் பைக் போன்ற மோட்டார் வாகனங்களை ஓட்டவும், ட்ரக் போன்ற கனரக வாகனங்களை ஓட்டவும் அனுமதியளித்துள்ளது. இதனால் அந்நாட்டு பெண்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி