ஆப்நகரம்

கிரெடிட் கார்டு மோசடி: மொரீஷியஸ் பெண் அதிபர் ராஜினாமா!

கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக மொரீஷியஸ் அதிபர் அமீனா குரிப்-பகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Samayam Tamil 18 Mar 2018, 2:27 pm
கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக மொரீஷியஸ் அதிபர் அமீனா குரிப்-பகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Samayam Tamil scandal tainted mauritius president ameenah gurib fakim resigns
கிரெடிட் கார்டு மோசடி: மொரீஷியஸ் பெண் அதிபர் ராஜினாமா!


அமீனா குரிப்-பகிம் துபாய் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் சென்ற போது அரசு வழங்கிய கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 7 லட்சம் ரூபாய் அளவிற்கு தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்கியதாக தனியார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

இதனையடுத்து அரசு வழங்கிய கிரெடிட் கார்டை சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியாதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அவர் பதவி விலகியாக வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் அமீனா குரிப்-பகிம் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அதற்கான ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் மார்ச் 23-ம் தேதி வரை அவர் அதிபர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி