ஆப்நகரம்

5300 அமெரிக்க டாலருக்கு ஏலம் போன டிஷ்யூ பேப்பர்- காரணம் இதுதான்..!!

அமெரிக்காவில் விசித்திரமாக நடைபெற்ற ஏலம் குறித்த தகவலை இங்கு பார்க்கலாம்

Samayam Tamil 24 Oct 2018, 6:17 pm
பிரபலமானவர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை ஏலம் விடுவது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.
Samayam Tamil scarlet-johanson
அமெரிக்காவில் 5300 டாலருக்கு ஏலம் போன டிஷ்யூ பேப்பர்..!!


மியான்மரின் சர்வாதிகார அரசை எதிர்த்து போராடியதற்காக, அந்நாட்டின் தற்போதைய பிரதமர் ஆங் சான் சூகி, 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

தற்போது அந்த வீட்டை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலத்தில் கிடைக்கும் தொகையில் தனக்கு பங்கு வேண்டும் என ஆங் சான் சூகியின் சகோதரர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இப்படி பிரபலங்களின் பொருட்களை ஏலத்தில் விடப்படும் நிகழ்ச்சி உலகளவில் வைரலை கிளப்பும் நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு ஏல நிகழ்ச்சி விசித்திரத்திலும் விசித்திரமாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் தொலைக்கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஸ்கார்லெட் ஜோஹென்சன், ஒரு டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி அதை கீழே தூக்கி எறிந்தார். அதை எடுத்த ரசிகர் ஒருவர், அதே நிகழ்ச்சியில் நடிகை ஸ்கார்லெட்டிம் கையெழுத்து வாங்கினார்.

அதை அடுத்து, அந்த ரசிகர் ஸ்கார்லெட் கையெழுத்திட்ட டிஷ்யூ பேப்பரை இ-பே இணையதளத்தில் ஏலம் விட்டார். பலரும் அதை வாங்க முந்திய நிலையில், ஸ்கார்லெட் ஜோஹென்சன் பயன்படுத்திய அந்த டிஷ்யூ பேப்பர் 5,300 டாலருக்கு ஏலம் போனது.

அதன்மூலம் கிடைக்கப்பெற்ற நிதி, அமெரிக்காவில் அதரவற்ற மக்களுக்காக செயல்பட்டு வரும் அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகை ஸ்கார்லெட் ஜோஹென்சனுக்கும், டிஷ்யூ பேப்பரை ஏலம் விட்ட ரசிகருக்கும் பல பராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அடுத்த செய்தி