ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு ஒத்தி வைப்பு: கொரோனா அதிகரிப்பால் அரசு அதிரடி உத்தரவு!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 17 Jan 2021, 4:31 pm
உலக நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரளை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருக்கின்றன. உலக நாடுகளில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு அந்தந்த நாடுகள் முடுவதும் முடக்கப்பட்டன. எல்லைகள் மூடப்பட்டன. அவசர சேவைகளை தவிர்த்து அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா அச்சத்தால் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்து நாடுகளிலும் மூடப்பட்டன. கோவிட்19 காரணமாக உலகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், 191 நாடுகளில் உள்ள 1,575,270,054 (157 கோடி) மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என யுனெஸ்கோ தனது ஆய்வில் தெரிவித்திருந்தது. இதில் பள்ளி பருவத்தினர் மட்டும் 74.3 கோடி பேர். இதே நிலை நீடித்தால், கல்வி உரிமைக்கே அது அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று யுனெஸ்கோ தலைவர் ஆட்ரே அஸவுலே தெரிவித்திருந்தார்.

இதனிடையே, பல்வேறு நாடுகளில் நோயின் தீவிரம் சற்று குறைந்துள்ளதாலும், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அவசர தேவைகளுக்காக பல நாடுகளில் போடப்பட்டு வருவதால், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உலகின் பல்வேறு நாடுகளில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிர 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அந்த வகையில், கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வந்த ஐக்கிய அரபு நாடான அபுதாபியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஜனவரி 17ஆம் தேதி (இன்று) முதல் திறந்து கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அமீரகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.

லண்டன் மாடல்: துபாயில் சுற்றுலாப் பயணிகளை கவர புதிய திட்டம்!

எனவே, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேலும் 3 வாரங்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடர அபுதாபி அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இதற்கு முன்பும் ஒருமுறை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அந்த உத்தரவை அபுதாபி அரசு திரும்பப் பெற்றது. தற்போது இரண்டாவது முறையாக பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிவிப்பை அபுதாபி அரசு திரும்பப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

அடுத்த செய்தி