ஆப்நகரம்

சரக்கு பாட்டில் காலி; எங்க அந்த சானிடைசர்? பார்ட்டியில் நடந்த பயங்கரம்!

சானிடைசரை மடமடவென குடித்த பலரும் அடுத்தடுத்து உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 23 Nov 2020, 6:28 pm
ரஷ்யாவில் உள்ள யகுடியா கிழக்கு ரிபப்ளிக்கின் டோம்டோர் கிராமத்தில் விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்து கொண்டவர்கள் மது அருந்தியுள்ளனர். ஒருகட்டத்தில் மது பாட்டில்கள் அனைத்தும் காலியிருக்கின்றன. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. போதையை ஏற வேண்டும் என்று வந்திருந்தவர்கள் துடித்தனர். அப்போது லேபிள் இல்லாமல் 5 லிட்டர் கேன்னிஸ்டர் பாட்டில் இருந்ததைக் கண்டனர். இது கிருமி நாசினியாக பயன்படுத்தப்படும் ஹேண்ட் சானிடைசர் ஆகும். அதுவும் போதை ஏற்றும் என்று கருதி மளமளவென குடித்துள்ளனர். அதில் 69 சதவீதம் மெத்தனால் கலந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சானிடைசர் குடித்த அனைவருக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Sanitiser Death in Russia


இதையடுத்து மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 6 பேர் யகுடியாவின் மண்டல தலைநகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது 48 வயதான பெண் மற்றும் 32 வயதான இளைஞரையும் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். இவர்கள் இருவரும் கோமா நிலைக்கு சென்றுள்ளனர்.

வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மெத்தனால் கலந்த ஹேண்ட் சானிடைசர் பயன்பாட்டிற்கு யகுடியா சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை விதித்திருந்தனர். ஆனால் அதையும் மீறி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி: எவ்வளவு தெரியுமா?

இதையொட்டி கிரிமினல் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ரஷ்யாவில் மலிவு விலையில் ஆல்கஹால் கிடைப்பது அரிது. இதனால் போதைக்காக மாற்று பொருட்களை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அது சில சமயங்களில் விபரீதங்களில் போய் முடிந்து விடுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு சைபீரியாவின் இர்குட்ஸ்க் மண்டலத்தில் குளியலுக்கு பயன்படுத்தப்படும் லோஷனை 100க்கும் மேற்பட்டோர் குடித்துள்ளனர். அதில் 78 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி