ஆப்நகரம்

சிங்கப்பூரில் தோன்றிய தீ வானவில்; மக்கள் வியப்பு!

சிங்கப்பூர் நாட்டில் திடீரென தோன்றிய அரிய தீ வானவில்லை பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.

TOI Contributor 22 Feb 2017, 1:13 pm
சிங்கப்பூர் நாட்டில் திடீரென தோன்றிய அரிய தீ வானவில்லை பொதுமக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.
Samayam Tamil singapore fire rainbow cloud phenomenon lights up sky
சிங்கப்பூரில் தோன்றிய தீ வானவில்; மக்கள் வியப்பு!


அந்நாட்டின் வடகிழக்கே திங்களன்று மாலை 5 மணியளவில் ஒரு மேகத்தின் பின்னால் பல வண்ண ஒளியில் இந்த தீ வானவில் தோன்றியது. இந்த தீ வானவில் சுமார் 15 நிமிடங்கள் வரை வானில் தோன்றி மறைந்தது.

சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு அதன் ஃபேஸ்புக் பதிவில் தீ வானவில் குறித்த தகவலை வெளியிட்டிருந்தது. ஒளி விலகல் எனப்படும் விஞ்ஞான நிகழ்வில், சூரியன் அல்லது சந்திரனின் ஒளியைக் கொண்டு, காற்றில் நிறைந்திருக்கும் பனித்துகள்கள் தீ பிழம்பை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.





அரிய தோற்றம் கொண்ட 'தீ வானவில்' ஒன்றை சிங்கப்பூரின் பல பகுதிகளில் மக்கள் கண்டு ரசித்தனர்.

இது குறித்து நாசா தரப்பில் கூறப்பட்ட விளக்கத்தில், ‘’ தீ வானவில், சூரியன் வானத்தில் 58 டிகிரி கோணத்தில் மேகங்களுடன் ஊடுருவும் போது உருவாகின்றன,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

English Summary:
A rare cloud phenomenon over Singapore has delighted people in the city-state. The multi-coloured glow appeared in the sky on Monday in the late afternoon, lasting for about 15 minutes, and was seen across the island.

அடுத்த செய்தி