ஆப்நகரம்

Coronavirus: சிங்கப்பூரில் ஒரு மாதம் லாக் டவுன்!!

சிங்கப்பூரில் வரும் 7ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கான ஊரடங்கு உத்தரவை அந்த நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் இன்று வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 3 Apr 2020, 3:36 pm
சிங்கப்பூரில் தற்போது பெரிய அளவில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அந்தநாட்டில் வரும் 7ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் லீ சியன் லூங் அறிவித்துள்ளார்.
Samayam Tamil சிங்கப்பூர் பிரதமர் லீ


கொரோனா உலகம் முழுவதும் பரவுகிறது என்கிறபோது முதன் முதலாக வீடியோ வெளியிட்டவர் லீ. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன், இந்தியா போன்ற நாடுகள் விழித்துக் கொள்ளும் முன்பு விழித்துக் கொண்டவர் பிரதமர் லீ. தனது நாட்டு மக்கள் கொரோனாவில் இருந்து எவ்வாறு தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு விரிவான விரிவாக விளக்கம் அளித்து இருந்தார்.

தற்போது அந்த நாட்டில் பெரிய அளவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கொரோனா பரவி வருகிறது. செவிலியர்களுக்கும், வெளிநாட்டினர் வசித்து வரும் பகுதிகளில் கொரோனா பரவி வருகிறது. ஆதலால், இதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஊரடங்கு தேவைப்படுகிறது என்று பிரதமர் லீ தெரிவித்துள்ளார். இந்த செய்தி அரசு ட்விட்டரிலும் பதிவிடப்பட்டுள்ளது.

ட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்!

ஆனால் இந்த ஊரடங்கில் இருந்து அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளித்து இருக்கிறார். ஒரே நாளில் அந்த நாட்டில் 74 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஏழு பேர் இந்தியர்கள். இதையடுத்து இந்த முடிவுக்கு சிங்கப்பூர் அரசு வந்துள்ளது.

கொரோனாவால் இறந்தவர்களுக்கு நாளை இரங்கல்: சீனா

சிங்கப்பூரில் இதுவரை 1,049 பேருக்கு கொரோனா தொற்று வந்துள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். 245 பேர் மீண்டு வந்துள்ளனர்.

கொரோனா: 50 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்

உலக நாடுகளில் பரவி வரும் கொரோனாவுடன் சிங்கப்பூரை ஒப்பிடும்போது குறைவுதான். துவக்கத்தில் இருந்தே பிரதமர் லீ மக்களுக்கு டிவியில் தோன்றி அறிவுரை வழங்கி வருகிறார். கொரோனா எவ்வாறு மற்ற புளூ வைரஸ்களில் இருந்து வேறுபட்டது என்பதை தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்.

அடுத்த செய்தி