ஆப்நகரம்

6 வயது சிறுமிக்கு 55 வயது ஆணுடன் திருமணம்!

ஆடு மற்றும் சில உணவுகளுக்காக 6வயது மகளை 55 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்

TOI Contributor 9 Aug 2016, 6:13 pm
ஆப்கானிஸ்தான் : ஆடு மற்றும் சில உணவுகளுக்காக 6வயது மகளை 55 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். கரிப்கோல் எனும் 6 வயது சிறுமியை சையத் அப்துல்கரீம் எனும் 55 வயது ஆணுக்கு சிறுமியின் தந்தை திருமணம் செய்து கொடுத்துள்ளார். திருமணம் செய்து கொடுத்து அதற்கு ஈடாக ஆடு, அரிசி, டீ தூள், எண்ணெய் மற்றும் சர்க்கரையை பெற்றுள்ளார். திருமணம் செய்து கொண்ட சில மணி நேரங்களில், சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது தந்தையும், மணம் செய்து கொண்ட சையத் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil six year old girl forced to marry 55 year old man
6 வயது சிறுமிக்கு 55 வயது ஆணுடன் திருமணம்!


தனது குடும்பத்திற்கு உணவு அளிக்க முடியாத காரணத்தால் சிறுமிக்கு திருமணம் செய்து கொடுத்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். மேலும் சிறுமி 18 வயதை எட்டிய பிறகே, 55 வயது சையத் உடலுறவு கொள்வதாக உறுதியளித்ததாகவும் கூறினார். திருமணத்திற்கு பிறகு தனது சொந்த ஊருக்கு அழைத்துச்சென்ற சையத், அன்று இரவு சிறுமியின் ஆடைகளை களைய முயற்சித்ததாக சாட்சியங்கள் கூறுகின்றன. தற்போது சிறுமி அவரது தாயிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி